Sunday, January 07, 2007

தமிழ் வலைத்தளங்களில் சம்பாதித்தல்-ஓர் ஆய்வு

தமிழ் வலைத்தளங்களில் சம்பாதிப்பது பற்றி ஒரு சிறிய கட்டுரை

1. PPC Adnetworks

PPC-Pay Per Clicks

PPC Adnetworks-ல் முண்ணனி நிறுவனம் Adsense. Adsense சாதரணமாக வலைத்த்ளங்களின் கட்டுரைக்கேற்ப விளம்பரங்களை தேர்ந்தெடுக்கும். இந்த முறை ஆங்கில வலைத்தளங்களுக்கு நன்றாக வேலை செய்யக்கூடிய முறை. ஆனால் தமிழ் வலைத்தளங்களுக்கு அந்த அளவு சரியானது அல்ல. அதனால்தான் adsense பயன்படுத்தும் சில வலைத்தளங்களில் சற்றும் சம்பந்தம் இல்லாத விளம்பரங்களை பார்ப்பீர்கள். சரி வேறு எந்த நிறுவனங்களை பயன்படுத்தலாம்?

Adbrite

Adbrite-ன் PPC rate ரொம்ப குறைவு. ஆனால் அவர்களின் interstial ads நல்ல சம்பாத்தியத்தை கொடுக்க கூடியது. ஆனால் அதுவே உங்கள் வலைத்தளங்களுக்கு வருகை தருபவர்களுக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. Adbrite இன்னும் சிறிது நாட்களில் video விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதைப் பற்றி படிக்க இங்கு செல்க.

Clicksor, exoclick, advertistic, performancing, Adster ஆகியவை எல்லா வலைத்தளங்களையும் சிறிது சுலபமாக ஏற்கக்கூடியவை.

sta-ads பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன், ஆனால் அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.

Affiliate programs

affiliate programs-ஐ தமிழ் வலைத்தளங்களில் இதுவரை நான் கண்டதில்லை. இந்த முறையை சரியான strategies படி பயன்படுத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம். இந்த முறையில் PPC கிடையாது. அதற்கு பதில் PPA(Pay Per Action). யாராவது உங்கள் மூலமாக ஒரு பொருளை வாங்கினால் அதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் commission உங்களுக்கு வழங்கப்படும். amazon, commision junction, click bank, azoogle ads போன்றவை இதில் முண்ணனி நிறுவனங்கள்.

முக்கால்வாசி பேர் இங்கு சும்மா பொழுதுபோக்காக தான் எழுதி வருகின்றீர்கள். உங்களுக்கென்று பணம் தேவைப்படாவிட்டாலும், ஏன் உங்கள் வலைத்தளங்கள் மூலம் வரும் வருமானத்தை தமிழ்நாட்டிலோ அல்லது ஈழத்திலோ உள்ள சேவை நிறுவனங்களுக்கோ அல்லது அநாதை நிறுவனங்களுக்கோ நன்கொடையாக கொடுக்கக் கூடாது.

மேலும் வலைத்தளங்களில் சம்பாதித்தல் பற்றி இங்கு படிக்கலாம்.

0 comments: